பவானி
மாநிலம் : புதுச்சேரி
மாவட்டம் : பாண்டிச்சேரி
வட்டம் : அரியங்குப்பம்
கிராமம் : மதுக்கரை கிழக்கு
சுய உதவிக் குழு : ஜெயம் சுய உதவிக் குழு
வாழ்வாதார செயல்பாடு : புறக்கடை கோழி வளர்ப்பு
லட்சாதிபதி தீதி பயணம்
குறைந்த வருமானமும் மிகக் குறைந்த வசதிகளும் கொண்ட இல்லத்தரசியான திருமதி பவானி, 'ஜெயம் சுய உதவிக் குழுவில்' உறுப்பினராக தனது பயணத்தைத் தொடங்கினார். அவரிடம் விடாமுயற்சியும் லட்சியமும் இருந்தபோதிலும், நிதி நெருக்கடி காரணமாக அவரால் எந்த ஒரு வாழ்வாதாரத் தொழிலையும் தொடங்க முடியவில்லை. இருப்பினும், புதுச்சேரி, ரிவர் (RIVER) கால்நடை மருத்துவக் கல்லூரியில் சுய உதவிக் குழு ஏற்பாடு செய்த கால்நடை வளர்ப்புப் பயிற்சியில் பங்கேற்றபோது, கோழி வளர்ப்புப் பற்றி அறிந்துகொண்டார். இந்தப் பயிற்சியால் ஊக்கம் பெற்று, அவர் சொந்தமாக கோழிப்பண்ணைத் தொழிலைத் தொடங்கினார். சுழல் நிதி (Revolving Fund), ரூ. 90,000 சமூக முதலீட்டு நிதி (CIF) மற்றும் தனது சொந்த சேமிப்பு ஆகியவற்றைக் கொண்டு கோழிக்குஞ்சுகளை வாங்கினார். சுமார் 500 கடக்நாத் மற்றும் உள்ளூர் இனங்களான (சிறுவேடை மற்றும் பெருவேடை) கோழிக்குஞ்சுகளையும் அவற்றுக்கான தீவனங்களையும் ரூ. 72,500 செலவில் வாங்கினார். சில மாதங்கள் அவற்றை வளர்த்த பிறகு, சுமார் 400 வளர்ந்த கோழிகளை வெற்றிகரமாக விற்பனை செய்துள்ளார். தனது தொழிலைப் பார்த்து யாராவது பாராட்டும்போது அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். சுய உதவிக் குழுக்களும் உற்பத்தியாளர் குழுக்களும் தனது வாழ்வில் கடவுள் கொடுத்த வரமாக அவர் கருதுகிறார். அவரது மன உறுதி, விடாமுயற்சி மற்றும் தொழில்முனைவோர் ஆர்வம் காரணமாக இன்று அவருக்கு மாதம் ரூ. 45,000 வருமானம் கிடைக்கிறது.