மஞ்சு பாம்னியா
மாநிலம் : மத்திய பிரதேசம்
மாவட்டம் : ஜாபுவா
வட்டம் : தாண்டலா
கிராமம் : சுத்ரேதி
சுய உதவிக் குழு : காயத்ரி சுயஉதவிக் குழு
வாழ்வாதார செயல்பாடு : கியோஸ்க் மைய இயக்கம்
லக்பதி திதி பயணம் :
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டத்தில் உள்ள சுத்ரேதி கிராமத்தைச் சேர்ந்த உறுதியான மனதிடம் கொண்ட மஞ்சு பாம்னியா, மீளுயிர்ப்பு மற்றும் சுயசார்புக்கு ஒரு ஊக்கமளிக்கும் உதாரணமாகத் திகழ்கிறார். பட்டதாரியாக இருந்தபோதிலும், காயத்ரி சுயஉதவிக் குழுவில் சேருவதற்கு முன்பு மஞ்சு பல சவால்களை எதிர்கொண்டார்.
ஆஜீவிகா மிஷனின் கீழ் உள்ள சுயஉதவிக் குழுவில் மஞ்சு சேர்ந்தபோது அவரது வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. குழுவின் கூட்டங்களில் ஒன்றில், வங்கி கியோஸ்க் ஐடி (ID) பற்றிய கருத்து அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வாய்ப்பால் ஈர்க்கப்பட்ட மஞ்சு, அதைத் தொடர முடிவு செய்தார். அவர் மத்தியப் பிரதேச கிராமின் வங்கி கியோஸ்க் ஐடிக்கு விண்ணப்பித்தார், அது அவருக்கு வழங்கப்பட்டது.
அவர் தனது கியோஸ்க் செயல்பாடுகள் மூலம் மாதம் ரூ. 15,000-20,000 ஈட்டத் தொடங்கினார். வங்கியுடனான அவரது வளர்ந்து வரும் சுமூகமான உறவு, தனது கியோஸ்க் மையத்தை விரிவுபடுத்துவதற்காக ரூ. 1 லட்சம் உட்பட கூடுதல் கடன்களைப் பெற அவருக்கு உதவியது. அவரது பயணம் இத்துடன் நின்றுவிடவில்லை, அவர் தனது கிராமத்தில் உள்ள மற்றவர்கள் ரூ. 8 லட்சம் கடன் பெற உதவினார், இது அவர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்க வழிவகுத்தது.
மஞ்சுவின் வருமானம் அவரது குடும்பத்தின் நிதி ஸ்திரத்தன்மையை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், அவரது காலில் ஒரு முக்கியமான அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும், தனக்கென ஒரு ஸ்கூட்டரை வாங்கவும் அனுமதித்தது. அவரது கடின உழைப்பைப் பாராட்டி, அதிக எண்ணிக்கையிலான பணப்பரிவர்த்தனைகளைச் செய்ததற்காக 2022 ஆம் ஆண்டில் அவருக்கு சிறந்த பிசினஸ் கரஸ்பாண்டண்ட் (BC) விருது வழங்கப்பட்டது.