பில் அண்டு மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் (பிஎம்ஜிஎஃப்)
கூட்டாளர்: ஜனவரி 22, 2020 முதல்
வகை: ஐபி-சிபி/பண்ணை
கூட்டாண்மையின் நோக்கம்:
பில் அண்டு மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் (BMGF) ஊரக வளர்ச்சி அமைச்சகத்துடன் இணைந்து, விவசாயம் மற்றும் கிராமப்புற வாழ்வாதாரங்களில் பண்ணை, பண்ணை சார் மற்றும் பண்ணை அல்லாத தொடர்பான விளைவுகளை மேம்படுத்துவதற்கான கற்றல் மற்றும் ஆதாரங்களை (evidence) உருவாக்குவதற்கு ஆதரவளிக்கிறது. ஆதரவின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு:
- கிராமப்புற விளைபொருட்களுக்கான உள்ளூர் சந்தை அமைப்புகளை உருவாக்குதல், கிராமப்புற விளைபொருட்களுக்கான உற்பத்திப் பொதிவு மற்றும் அடையாளமிடுதல் (labelling), உள்ளூர் மதிப்பு கூட்டலுக்கான தொழில்நுட்பம், கடின உழைப்பைக் குறைத்தல் மற்றும் மேம்படுத்தப்பட்ட செயல்திறன், டிஜிட்டல் தொழில்நுட்பப் பயன்பாடு, மேம்பட்ட தகவல் சேகரிப்பு மற்றும் செயல்திறன் கண்காணிப்பிற்கான அமைப்பு ஒருங்கிணைப்பு (system integration), மற்றும் வாழ்வாதாரங்களின் பல்வகைப்படுத்தலுக்கான அணுகுமுறைகளை வலுப்படுத்துதல்.
- ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தை (H&N) ஒரு முக்கிய திட்ட அங்கமாக ஒருங்கிணைப்பதற்காக (integrate) அவர்கள் (NRLM) இற்கு ஆதரவளிப்பார்கள்।
கூட்டாளர் வலைத்தளம்: https://www.gatesfoundation.org/our-work/places/india